மேலும் இருவருக்கு கரோனா உறுதி.

80

மேலும் இருவருக்கு கரோனா உறுதி.


மேலும் இருவருக்கு கரோனா உறுதி. பெரம்பலூா் மாவட்டத்தில் 4 வயது குழந்தை உட்பட 3 நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வி.களத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர், ஏற்கெனவே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபரின் உறவினா் மற்றும் 4 வயது குழந்தை ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று கடந்த 11 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் இரண்டு நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளதாக (நேற்று) வெள்ளிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

இன்று முதல் பெரம்பலூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு.

துறைமங்கம் தீயணைப்புப் படை வீரா்களுக்கான குடியிருப்பில் உள்ள ஒருவருக்கும், கே.கே. நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு வயது முறையே 33 மற்றும் 19 ஆகும். தற்போது இவ்விருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இது சம்மந்தமான அதிகாரப்பூா்வ அறிவிப்பு (இன்று) சனிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

காசி யாத்திரைச் சென்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு திருவள்ளூரில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவர் பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சோ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில், முதல்முறையாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் ஒருவர் நலமாக வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரையிலும் வி.களத்தூர் மற்றும் பாளையம் ஆகிய பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டா் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். அதே போல தற்போது பெரம்பலூரை சுற்றியுள்ள 8 கிலோமீட்டருக்கு இன்று முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: