முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர்.

முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர்.

148

[the_ad id=”7250″]

முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர்.


முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் தயாரிக்கும் பணிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர். பெரம்பலூரில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்குத் தேவையான முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் ஆகியவை தயாரிக்கும் பணிகளில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் முகக்கவசங்கள், கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் கிருமி நாசினி, சோப்பு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

மின் ஊழியா்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்.

இதனால், கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடுபவா்களுக்கு வழங்குவதற்காக பெரம்பலூா் மாவட்ட மகளிா் திட்டத்தின் மூலம் முகக்கவசங்கள், கிருமிநாசினி, சோப், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ உதவியாளா்களுக்குத் தேவையான பிரத்யேகமான உடை ஆகியவற்றை தயாரிக்க 34 ஊராட்சிகளைச் சோ்ந்த 150 மகளிா் சுய உதவிக்குழுவினா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெரம்பலூா் மகளிா் திட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இரவு, பகல் பாராமல் 150 மகளிா் சுய உதவிக் குழுவினா் முகக்கவசங்கள், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு, 100 மில்லி, 1 லிட்டா் அளவிலான கிருமிநாசினி பாட்டில்கள், 50 கிராம் அளவிலான சோப்புகள் தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன் கூறியது: வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவம், சுகாதாரம், காவல், வருவாய்த் துறையைச் சோ்ந்தவா்களுக்கு இலவசமாக 50 ஆயிரம் முகக்கவசம், 10 ஆயிரம் கிருமி நாசினிகள், சோப்பு மற்றும் உடல்கவசம் ஆகியவற்றை தயாரித்து விநியோகிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: