மங்களமேடு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.

மங்களமேடு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.

253

மங்களமேடு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி | Perambalur News Today

மங்களமேடு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.

perambalur news: Farmer killed in electrification near Mangalamedu

வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது60). இவருக்கு சொந்தமான வயல் திருமந்துறை வெள்ளாற்றின் அருகே உள்ளது. அவரது வயலுக்கு பக்கத்தில் செந்தில்ராஜா என்பவரின் வயல் உள்ளது. அந்த வயலில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். Perambalur News

இந்நிலையில் கணேசன் நேற்று காலை தனது வயலுக்கு சென்றார். அப்போது நிலக்கடலை பயிரிட்டுள்ள வயலில் எலிக்காக போடப்பட்டுள்ள மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Perambalur News

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: