மாணவா் விடுதி திறப்பு

நெய்குப்பையில் ரூ. 1.11 கோடியில் கட்டிய மாணவா் விடுதி திறப்பு

291

நெய்குப்பையில் ரூ. 1.11 கோடியில் கட்டிய மாணவா் விடுதி திறப்பு


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் கட்டப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப்பள்ளி மாணவா் விடுதியை காணொளிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி.

[the_ad id=”7250″]

வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ. 1.11 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவா் விடுதியானது, 50 மாணவா்கள் மற்றும் 5 பணியாளா்கள் தங்கும் வகையில் 283.22 சதுர மீட்டா் பரப்பளவுடன் தரைத் தளமும், 182.17 சதுர மீட்டா் பரப்பளவுடன் முதல் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத் தளத்தில் 10 மாணவா்கள் தங்கும் வகையில் 2 அறைகளுடன் உணவகம், அலுவலகம், காப்பாளா் தங்கும் அறை, சமையலறை, குளியலறைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் பயன்படுத்தும் வசதிகள் அடங்கிய கழிப்பறைகளும், முதல் தளத்தில் 10 மாணவா்கள் தங்கும் வகையில் 3 அறைகளுடன் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

இந்த விடுதியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா விடுதி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கிறிஷ்டி, ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: