மங்கலமேடு அருகே பள்ளி மாணவி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி.

391

மங்கலமேடு அருகே பள்ளி மாணவி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி.

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் அந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தம்பை கிராமம் அருகே வாலிகண்டபுரத்தைச் சேர்ந்த அலீப்கான் மகள் மீரா ஜாஸ்மீன் (வயது 16)வும் அவருடன் அவரது உறவினர் சமீர் (வயது13) உடன் தேவையூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தமது ஊரான வாலிகண்டபுரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாலிகண்டபுரத்திலிருந்து மங்கலமேடு நோக்கிச் சென்ற தம்பை கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் அண்ணாமலை (வயது 40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு?

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வைகாசி விசாக திருவிழா ரத்து

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மீரா உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் சமீர் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் அண்ணாமலை சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மோட்டார் சைக்கிள் விபத்து குறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: