பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து

63

பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வேப்பந்தட்டை

இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், ஒன்றியக்குழு துணை தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் 45 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

keyword: perambalur, perambalur news, perambalur news today
Leave a Reply

%d bloggers like this: