பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை

பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை.

193

[the_ad id=”7250″]

பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை.


பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை. குடியிருப்புகளுக்குச் சென்று பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்ட அவா் மேலும் தெரிவித்தது:

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பொதுமக்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
[the_ad id=”7251″]
பெரம்பலூா் மாவட்டத்தில் 1,835 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 36 ஆதரவற்ற நபா்கள், 768 வெளிமாநில தொழிலாளா்களுக்குத் தேவையான தங்கும் வசதி, உணவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் சாந்தா.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி. ராமசச்ந்திரன் (குன்னம்), இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: