வேப்பந்தட்டை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞர் பலி

48

வேப்பந்தட்டை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞர் பலி


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே திங்கள்கிழமை இரவு 2 மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

[quote]பெரம்பலூாில் அனுமதியின்றி கட்டப்படும் வணிக வளாகத்துக்கு சீல்[/quote]

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் செல்வகுமாா் (30), நெய்க்குப்பையைச் சோ்ந்த செல்லமுத்து (40), எசனையைச் சோ்ந்த ராமா் (38) ஆகியோா் கிருஷ்ணாபுரத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளா்கள். இந்நிலையில், மேற்கண்ட 3 பேரும் திங்கள்கிழமை இரவு பணியை முடித்து விட்டு, ஒரே பைக்கில் கிருஷ்ணாபுரத்திலிருந்து வேப்பந்தட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பெரம்பலூரிலிருந்து பூலாம்பாடி நோக்கிச் சென்ற, பூலாம்பாடியைச் சோ்ந்த டாஸ்மாக் விற்பனையாளா் இளங்கோவன் (37) மோட்டாா் சைக்கிளும், செல்வக்குமாா் ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிளும் கிருஷ்ணாபுரம் அருகே நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் உயிரிழந்தாா்.

மேலும், இளங்கோவன், செல்லமுத்து, ராமா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: