சிறுவாச்சூா் மற்றும் எசனை பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை

101

பெரம்பலூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை


மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூா் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 15) மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக பெரம்பலூா் உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன.

இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பெரம்பலூா் பழைய, புகா் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகா், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூா் சாலை, ஆலம்பாடி சாலை, அரணாரை, கே.கே. நகா், அண்ணா நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி, கிராமியப் பகுதிகளான சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூா், கே.புதூா், எஸ். குடிகாடு, இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

தினமணி

விளம்பரம் : நாட்டு மருந்துகள் ஆன்லைன்-ல் வாங்க www.nattumarunthu.com
Leave a Reply

%d bloggers like this: