பெரம்பலூா் மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

132

பெரம்பலூா் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள், கலைக் குழுவினா் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாகப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுவினரையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கான இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிக்கொள்ள நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.

வேப்பந்தட்டை நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் விழுந்து தாய், மகள் தற்கொலை.

நிதியுதவிக்காக விண்ணப்பிக்கும் தனிப்பட்ட கலைஞர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 500 கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதே போலக் கலைக் குழுவினர்களின் விண்ணப்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 100 குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிதியுதவியானது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் நிதியுதவி பெற்றுப் பயன்பெற விரும்பும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்கள் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். அது போல் விண்ணப்பிக்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டப் பிரிவில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

உறுப்பினா்-செயலா்,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்,
31- பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-600 028

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் இந்தமாதம் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: