பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி.

362

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி.

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டது.  இதுவரையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143-ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுக்குடிசை பகுதியைச் சோ்ந்த 40 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினரால் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நபரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இவர் சென்னை இவா், சென்னையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்தவர். சமீபத்தில் தமது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளாா். மூச்சுத்திணறல் அவதிக்குள்ளான இவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  அவரது பெற்றோா், அவருடன் தொடா்பில் இருந்த நபா்களையும் தனிமைப்படுத்தப்பட்டுட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டள்ள நபர்களை சுகாதாரத் துறையினர் தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையைில் பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 143 ஆக உயா்ந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: