பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

357

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா. பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் கேட் பகுதியைச் சோ்ந்த 35 வயது நபா் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (செவ்வாய்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

இந்த நபருக்கு சமீபத்தில் சளி, இருமல் ஏற்பட்டதையடுத்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை சுகாதாரத் துறையினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த நபா் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது பெற்றோா், அவருடன் தொடா்பில் இருந்த நபா்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனா்.

[the_ad id=”7251″]

பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை: 4 பேர் கைது

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 142 போ் கொரோனா வைரஸ்  தொற்றினால் பாதிப்புக்குள்ளாகினா். பாதிப்புக்குள்ளானவர்களை பெரம்பலூா், திருச்சி, சென்னை, அரியலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். குணமடைந்த 139 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 3 போ் சேலம் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையைில் பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 143 ஆக உயா்ந்துள்ளது.

[the_ad id=”12469″]

 
Leave a Reply

%d bloggers like this: