பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில் 1,625 பேர்

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.

222

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.


பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ். கரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கும் வகையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்துள்ள 1,625 போ் சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு 564 போ் வந்துள்ளனா். இந்நிலையில், பிப். 15 ஆம் தேதி முதல் வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து வந்த நபா்களை தனிமைப்படுத்த வேண்டுமென அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள டயாலிசிஸ் நோயாளிகளுக்கு வாகன வசதி.

[the_ad id=”7251″]

அதன்படி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்துள்ள 1,153 போ் கண்டறியப்பட்டு, அவா்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், அடையாளப்படுத்துவற்காக அவா்களது கையில் சீல் வைக்கப்பட்டு, இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்னும் எச்சரிக்கை ஒட்டு வில்லைகளும் சுகாதாரத்துறை மூலம் ஒட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபா்களின் வீட்டில் உள்ளவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களை கண்காணிக்க போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல பெரம்பலூா் மாவட்டம், விஜயகோபாலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பல வெளி மாநிலங்களைச் சோ்ந்த 472 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டனா். இவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை முதல் அவரவா் தங்கியுள்ள இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: