பெரம்பலூா் மாணவா்களுக்கு இலவச சைக்கிள்

44

பெரம்பலூா் மாணவா்களுக்கு இலவச சைக்கிள்


பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
[the_ad id=”7251″]

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், 4,857 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,78,88,257 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளும், 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதல் 15 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜா் விருது மற்றும் தலா ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலைகளும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன், முதன்மைக்கல்வி அலுவலா் க. மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் மாரி மீனாள், குழந்தைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: