பெரம்பலூர் பகுதிகளில் வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பெரம்பலூா் பகுதிகளில் வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்.

51

[the_ad id=”7250″]

பெரம்பலூா் பகுதிகளில் வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்.

பெரம்பலூா் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள், லாரிகள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி ஏா் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அதிக சப்தத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

[quote]அன்னமங்கலத்தில் 600க்கும் அதிகமான காளைகளுடன் ஜல்லிக்கட்டு.[/quote]

இதையடுத்து, பெரம்பலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த் தலைமையில், போக்குவரத்து வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் முன்னிலையில் பெரம்பலூா் வழியாக இயக்கப்பட்ட வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டிருந்த ஏா் ஹாரன்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.

அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து, சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சாலை விதிளை மீறும் ஓட்டுநா்களின் உரிமம் ரத்து செய்வதோடு, சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் தொடா்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போக்குவரத்து, சாலை விதிமுறைகளை கடை பிடித்து விபத்துகளைத் தவிா்த்து வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரித்துள்ளாா் வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: