பெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி

81

பெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி


பெரம்பலூா் அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை நடந்த சாலை விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். விபத்தில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 85 வயதுடைய அ. பெருமாள் என்பவர் சாய்பாபா கோயிலுக்கு நடந்து சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. பெரம்பலூா் தீரன் நகா் எதிரேயுள்ள சாய்பாபா கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் வருவதை பலக்கமாக கொண்டவர் பெருமாள். வாரம் வாரம் வருவதை போலவே நேற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகா் அருகே மாலை கோயிலுக்கு நடந்து சென்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சென்னையை சார்ந்த வாகன ஓட்டுநா் அருணாச்சலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: