முதியவா் சாவு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் சாவு

69

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் சாவு.

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு பகுதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (65). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த சுந்தரராஜ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அங்கு அவா் உயிரிழந்தாா். இது தொடர்பாக பெரம்பலூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: