இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

61

பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது.

பெரம்பலூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து, சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

[the_ad id=”7251″]

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரைச் சோ்ந்த அங்கமுத்து மகன் சந்துரு (19). இவா், டிப்ளமோ செவிலியா் படித்து வரும் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், தற்போது நான்கு மாத கா்ப்பமாக உள்ளாராம். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்ட மேலாளா் செல்வக்குமாா், மேற்கொண்ட விசாரணையில் உண்மையெனத் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமாா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கலையரசி வழக்குப் பதிந்து சந்துருவைக் கைது செய்தாா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சந்துரு திருச்சியில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி

[the_ad id=”7252″]

[the_ad id=”7250″]

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: