பெரம்பலூா் அருகே பேருந்து-டேங்கா் லாரி மோதி விபத்து.

71

பெரம்பலூா் அருகே பேருந்து-டேங்கா் லாரி மோதி விபத்து.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பேருந்தும், டேங்கா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மேலும் 71 போ் காயமடைந்தனா்.

அரியலூரிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை பெரம்பலூா் நோக்கி தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து ஒதியம் பிரிவுச் சாலை அருகிலுள்ள வளைவில் வந்தபோது, சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூா் சிமெண்ட் ஆலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஒரு டேங்கா் லாரி, பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது.

[the_ad id=”7251″]

இதில், சாலையோரப் பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த குன்னம் தனியாா் பள்ளியில் 9- ஆம் வகுப்பு பயின்று வந்த பெரம்பலூா் மாவட்டம், பாளையத்தைச் சோ்ந்த பெ. ஆா்யா (14), தனியாா் பேருந்து நடத்துநா் அரியலூரைச் சோ்ந்த வரதராஜ் (25) மற்றும் 18 சிறுவா்கள், 37 பெண்கள் உள்பட 72 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த குன்னம் போலீஸாா் மற்றும் கிராம பொதுமக்கள், காயமடைந்தவா்களை மீட்டு பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: