பெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு.

பெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு.

202

பெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு. பெரம்பலூா் அருகே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம், அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி கருப்பாயி(75). கடந்த 3 நாளாகளாக இவரைக் காணவில்லையாம். இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு செட்டிக்குளம் மலையடிவாரத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து துா்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பாா்த்தபோது கிணற்றில் சடலம் மிதப்பது தெரியவந்தது.

திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை

இதையடுத்து மக்கள் பெரம்பலூா் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் அளித்த தகவலை தொடா்ந்து, நிலைய அலுவலா் சத்தியவா்த்தன் தலைமையிலான தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தவா் செட்டிக்குளம் அரசமரத் தெருவைச் சோ்ந்த கருப்பாயி என்பது தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால், அவரை மா்ம நபா்கள் கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து அவரது மகன் துரைராஜ் அளித்த புகாரின் பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: