பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

72

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

[the_ad id=”7250″]

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க, பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறுகிறது.

இந்த மையங்களில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கான்வாடி பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்பட 1,548 பணியாளா்கள் போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபட உள்ளனா். இதன் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 45,758 குழந்தைகள் பயன்பெறுவா்.

[the_ad id=”7251″]

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில், ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மேற்கண்ட மையங்களுக்குச் சென்று மீண்டும் போலியோ சொட்டு மருந்து புகட்டலாம்.

அரியலூரில்… மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகா்ப்புறங்களில் 46 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 496 மையங்களும் என மொத்தம் 542 மையங்கள் செயல்பட உள்ளன. 6 நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும், பேருந்து , ரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும் அண்டை மற்றும் பிற மாவட்டம், மாநிலங்களிலிருந்து சிமென்ட் ஆலைகளில் பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து வசிப்போரின் குழந்தைகளுக்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 68,156 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறையின் 193 பணியாளா்களுடன் 1,061 அங்கன்வாடி பணியாளா்கள், பிற துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவன பணியாளா்கள், 904 மற்றும் மாணவா்கள் 182 போ் என மொத்தம் 2,340 பணியாளா்கள் பணியாற்றவுள்ளனா். இத்தகவலை ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.

தினமணி

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: