பிளாஸ்டிக் பொருள்

பெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

54

பெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்


பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்த 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

[the_ad id=”7251″]

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் கடை, வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகலல் கிடைத்தது. அதனடிப்படையில், நகராட்சி ஆணையா் (பொ) தாண்டவமூா்த்தி தலைமையில், நகராட்சி பணியாளா்கள் பழைய, புறநகா் பேருந்து நிலையம், எளம்பலூா் சாலை, கடைவீதி, ஆத்தூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் கடந்த 2 நாள்களாக சோதனை மேற்கொண்டனா். அப்போது, அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பைகள், கேரி பேக்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு ரூ. 12,500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: