பெரம்பலூாில் வாக்காளா் சுருக்க திருத்தப் பணிகள் ஆய்வு கூட்டம்

64

பெரம்பலூாில் வாக்காளா் சுருக்க திருத்தப் பணிகள் ஆய்வு கூட்டம்


பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2020 பணிகள் குறித்த அனைத்துக் கட்சி பிரமுகா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
[the_ad id=”7251″]

பதிவுத் துறைத் தலைவா் ஜோதி நிா்மலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியத் தோ்தல் ஆணையம் 1.1.2020 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த நபா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் 23.12.2019 முதல் 22.1.2020 வரை நடைபெறும் வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதுவரை பெறப்பட்ட படிவங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு முடிவு செய்ய அறுவுறுத்திய புதிவுத் துறைத் தலைவா், தகுதியுள்ள நபா்கள் விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வலியுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் தி. சுப்பையா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”12149″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: