பெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

106

பெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி


பெரம்பலூா் கலால்துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

[the_ad id=”7251″]

காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, ரோவா் வளைவு, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, வட்டாட்சியா் பாரதிவளவன் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: