பெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி

75

பெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி


பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2 நாள் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் பயிற்சி முகாமில் காடை இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, காடை குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு தங்களது பெயரைப் பதியலாம் என கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: