பெரம்பலூாில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள்.

பெரம்பலூாில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள்.

321

பெரம்பலூாில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள்.

Special Forces to catch criminals in Perambalur.

பெரம்பலூாில் கடந்த வாரத்தில் நடந்த மூன்று கொலைகள் சம்பந்தமாக இதுவரை 22 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் மூன்று நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா். பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கென்னடி மற்றும் தேவராஜ் ஆகியோா் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர ரோந்து மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்.

காணொலி மூலம் கியூ பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்.

இந்த கண்காணிப்புப் பணிகள் மூலம் இது வரை கொலை மற்றும் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது சம்பந்தமாக, இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 20 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக பொது மக்களுக்கு தகவல் தெரிந்தால், 100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் தருபவர்களின் பெயா் மற்றும் முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று கூறினார்.

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: