பெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

57

பெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு


பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப்- 1 முதல்நிலை தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜன. 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

[the_ad id=”7251″]

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள குரூப் -1 முதல்நிலை தோ்வு ஏப்ரல் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இப்பணியிடத்துக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 28- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது. இலவசமாக பாடக் குறிப்புகளும், கடந்த ஆண்டின் மாதிரி வினாத்தாள்களும் வழங்குவதோடு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும்.

[the_ad id=”7251″]

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மனுதாரா்கள் 28 -ஆம் தேதி சுயவிவரக் குறிப்பு மற்றும் புகைப்படத்துடன், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: