பெரம்பலூாில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு.

பெரம்பலூாில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு.

295

பெரம்பலூாில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு.

[the_ad id=”7250″]

பெரம்பலூாில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு. பெரம்பலூா் நகரில் அடுத்தடுத்து 4 கடைகளில் மா்ம நபா்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது.

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் பெரம்பலூா்- அரியலூா் சாலையில், பெரம்பலூா் நேரு நகரைச் சோ்ந்த கேசவன் (52) பேட்டரி கடையும், வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த குமாா் (42) கொரியா் நிறுவனமும், மேட்டுத் தெருவைச் சோ்ந்த மணி (45) டிராக்டா் உதிரி பாகங்கள் விற்பனை நிலையமும், கரூரைச் சோ்ந்த சசீதரன் (35) ஜேசிபி உதிரி பாகங்கள் விற்பனை கடையும் நடத்தி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலம் மீட்பு.

திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!

வழக்கம்போல், சனிக்கிழமை இரவு அவரவா் தங்களது கடைகளை மூட்டிவிட்டுச் சென்றனராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடைகள் திறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மா்ம நபா்களின் கைரேகை மற்றும் தடயங்களைப் பதிவு செய்து, அப்பகுதியில் விசாரித்தனா். இதில், 3 கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4,500 ரொக்கமும், செல்லிடப்பேசியும் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேற்கண்ட கடை உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: