பெரம்பலூர் ரவுடி கொலை வழக்கு : சிறுவன் உள்பட 10 பேர் கைது

894

[the_ad id=”7250″]

பெரம்பலூர் ரவுடி கொலை வழக்கு : சிறுவன் உள்பட 10 பேர் கைது.

பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி கபிலன் (வயது 27) துறைமங்கலம் வாசுகி தெருவை சேர்ந்த சுப்ரமணியன்-தனலட்சுமி தம்பதியின் 2-வது மகளை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனை சுப்ரமணியனின் மூத்த மருமகனான, அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கபிலன் ஒரு வழக்கு சம்பந்தமாக சிறைக்கு சென்று விட்டு, கடந்த மாதம் தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கபிலன் குடிபோதையில் சுப்ரமணியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரவிந்தன் தனது ஆதரவாளர்கள் மற்றும் சுப்ரமணியன் குடும்பத்தினருடன் இரவில் கபிலன் வீட்டிற்கு சென்று, அவரை அடித்து உதைத்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தார்.

தமிழக தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை: ஒரு நாளைக்கு 23000.

இந்தியாவில் இதுவரையில்லாது ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு!

[the_ad id=”7251″]

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அரவிந்தன், சுப்ரமணியன், தனலட்சுமி, 18 வயதுடைய சிறுவன், கார்த்திக், கோபி ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு 18 வயதுடைய சிறுவன், துறைமங்கலம் வாசுகி தெருவை சேர்ந்த ஆனந்த்(29), சரண்ராஜ்(24), 9-வது வார்டை சேர்ந்த ராஜேஷ்(22) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து கைதான 10 பேரில், 7 பேரை திருச்சி மத்திய சிறையிலும், தனலட்சுமியை திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் சிறையிலும், 2 சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: