பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

322

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஆட்சியர் விடுத்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்கள் அனைவரும் முககவசத்தை கட்டயாம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் மீறுவோர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அபராதம் வசூலிக்கப்படும். அதுபோல இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். இதை மீறுவோரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படும். மேலும் பொது இடங்களில் தேவையின்றி கூட்டம் கூடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தீவிரத்தை உணர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தவறாது கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா அதில் தெரிவித்துள்ளார்.Leave a Reply

%d bloggers like this: