பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறப்பு.

198

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறப்பு.

[the_ad id=”7250″]

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறப்பு. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனையடுத்து சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஜூன் 1ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்துபவர்கள், பொதுமக்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  வழக்கு விசாரணைகள், சாட்சிகள் விசாரணை நடைபெறவில்லை.

நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய புதிய மனுக்களை ஏற்பதற்காக  சிவில் வழக்குகளுக்காக ஒரு பெட்டியும், குற்றவியல் வழக்குகளுக்காக ஒரு பெட்டியும் வைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஜாமீன், முன்ஜாமீன் கோரும் மனுக்கள் ஏற்கப்பட்டன.

[the_ad id=”7251″]

சலூனுக்கு முடி வெட்ட போகிறீர்களா ஆதார் அட்டை எடுத்து போங்க.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

4-வது கட்ட ஊரடங்கு முடிவடைந்து ஜூன் 1ம் தேதி அனைத்து கடைகளும், வழக்கம்போல திறக்கப்பட்டு காலை முதல் இரவு வரை வழக்கம்போல இயங்கின. ஓட்டல்கள், உணவுவிடுதிகளில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மக்கள் அதிக அளவில் இருந்தனர். மகளிர் போலீஸ் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் நெருக்கடி காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கியது.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: