பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த பயணிகளுடன் இயங்கிய பேருந்து.

206

பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த பயணிகளுடன் இயங்கிய பேருந்து.

நேற்று (திங்கள் கிழமை) முதல் 50 சதவிகித பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று பெரம்பலூரில் உள்ள 103 அரசுப் பேருந்துகளில், 45 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 27 பேருந்துகள் நகா்ப்புறங்களுக்கும், எஞ்சிய பேருந்துகள் திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்பட்டது.

நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் ஒற்றை இலக்க பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவை விதிகளை தளர்த்தி பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நேற்று காலை 5 மணி முதல் அரசு உத்தரவின்படி மொத்தமுள்ள  பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டது.

ஊராட்சி செயலர் பதவியை நீக்கம் செய்யகோரி புகார் மனு.

பள்ளிகள் எப்போது திறக்கலாம்? பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு..

கையுறை அணிந்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுடன் புறப்பட்டு புறநகர்பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தது.  பின்னர் இயக்கப்பட்ட பேருந்துகளில் 3 பேர் 5 பேர் என 10க்கும் குறைவான ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்தனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்ட முதல் நாள் என்பதால் பொதுமக்கள் அதிகமாக பேருந்தை பயன்படுத்தவில்லை. இனி போகும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பார்த்தால்தான் தெரியும்.
Leave a Reply

%d bloggers like this: