பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் தற்கொலை.

405

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் தற்கொலை.

குன்னம் அருகே, வயல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி மலர். இவருக்கு வயது 53. இவருடைய கணவர் பெரியசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வயலப்பாடி கிராமத்தில் விவசாய பணிக்காக மலர் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. சர்க்கரை வியாதியின் அவதியில் இருந்ததால் மன வேதனையடைந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பந்தமாக அவரது மகன் அய்யாக்கண்ணு குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

அதுபோல குன்னம் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஆனந்தி இவருக்கு வயது 22.  இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியிருந்தார். ஆனந்தி எந்த ஒரு வீட்டு வேலையும் செய்யாமல் இருந்துள்ளார். இதனை அவரது தாய் பழனியம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை தாங்கி கொள்ளாமல் மனமுடைந்த ஆனந்தி நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து ஆனந்தியின் தாயார் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதுபோல குன்னம் அருகேயுள்ள சோமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி மகள் ராதிகா. இவருக்கு வயது 25. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவருக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை தாங்கமுடியாமல் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: