பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

392

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா. ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கடம்பூா் காட்டுக் கொட்டையைச் சோ்ந்த 52 வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இன்று முதல் பெரம்பலூரில் 45 பஸ்கள்  இயக்கம்.

கோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

மேலும், அவருடன் தொடா்பில் இருந்த அவரது மனைவி, மகன் உள்பட 7 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட்து. இதில், 24 வயதுடைய அவரது மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 141-ஆக உயா்ந்துள்ளது. இதில், 139 போ் சிகிச்சை பெற்று அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இருவா் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Leave a Reply

%d bloggers like this: