பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலி.

416

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலி.

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலி. பொம்மனப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்பவரும், பாண்டகப்பாடியை சேர்ந்த முத்தையா என்பவரும் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.

விவசாயி மரணம்.

வேப்பந்தட்டை அருகிலுள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்த முத்தையா வீட்டில் கழுத்தில் துணி சுற்றிய நிலையில் பிணமாக கிடந்தார். 29 வயதான முத்தையாவிற்கும் அவரது தந்தைக்கும் இடையே கடந்த புதன் கிழமை குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் கழுத்தில் துணி சுற்றிய நிலையில் முத்தையா பிணமாக கிடந்தார். இது சம்பந்தமாக தகவலறிந்த வி.களத்தூர் காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்தையா, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?   என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறு தோண்டும் போது மண் சரிந்ததில் ஒருவர் பலி.

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்.

தொழிலாளி மரணம்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் பைக் மோதியதில் பலியானார். 50 வயதான கூலி தொழிலாளியான இவர் கடந்த புதன்கிழமை சைக்கிளில் அதே பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அன்பழகன் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த செல்வராஜ் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடந்த் விபத்தினை குறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: