பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை.

180

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்காக கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் தொட்டிகள்

மேய்ச்சலின்போது, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஆங்காங்கே தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் சில, பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியிலும், சில இடங்களில் தண்ணீர் இல்லாத பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குடிநீர் தொட்டிகளில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி அரசு அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. இதனால், மேய்ச்சலின் போது தண்ணீர் கிடைக்காமல் கால்நடைகள் தவித்து வருகின்றன.

காட்சி பொருளானது

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் காட்சி பொருளாகவே உள்ளது. மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள தொட்டிகளின் நிலைமையும் இதுபோலத்தான் இருக்கிறது. எனவே கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தினமும் தண்ணீர் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: