பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்தவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு.

294

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்தவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்தவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு. கொரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு உத்த ரவு அமல்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து, எந்தவொரு போக்குவரத்தும் செயல் படாத காரணத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர் களை மாவட்ட நிர்வாகம், அவர்களின் சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்து வரு கிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 416 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தில் விருப்பம் தெரிவித்திருந் தனர். அதன்படி 416 பேரை யும் பீகார் மாநிலத்திற்கு செல்வதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 40 மதிப்பில் அவர்களுக்கு சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டது.

இதையடுத்து நேற்று மதி யம் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 12 பஸ்கள் மூலம் திருச்சி ரெயில் நிலையத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் காலை உணவு வழங்கி, வழி அனுப்பி வைத்தார்.

இரு கரங்களை கூப்பி நன்றி தெரிவித்தனர்

அப்போது அவர்கள் பஸ்சில் இருந்தவாறே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வா கத்துக்கும் கண்ணீர் மல்க இரு கரங்களை கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண் டனர். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, உதவி ஆணையர் (கலால்) ஷோபா, சுகாதாரப்பணி களின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, தாசில் தார்கள் பாரதிவளவன் (பெரம்பலூர்), பாலசுப்ரமணியன் (ஆலத்தூர்), சின்னதுரை (குன்னம்), கவிதா (வேப் பந்தட்டை) ஆகியோர் உடனி ருந்தனர்.

வாகனங்களில் போலீசார், வருவாய்த்துறையினர் திருச்சி ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து மாலை யில் சிறப்பு ரெயிலில் 416 பேரையும் ஏற்றி பீகாருக்கு வழியனுப்பி வைத்தனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கி பணி புரிந்து வந்த மத்திய பிரதேச மாநில தொழிலாளர்கள் 48 பேரையும் சேலத்தில் இருந்து நேற்று இரவு சிறப்பு ரெயிலிலும், மணிப்பூர் மாநில தொழிலாளர்கள் 6 பேரை சென்னையில் இருந்து நேற்று மதியம் சிறப்பு ரெயிலிலும் ஏற்றி வருவாய்த்துறையினர், போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: