பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

376

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரில், 97 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 5 கர்ப்பிணிகள், 2 பிரசவித்த தாய்மார்கள், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பிய 3 பேர் என மொத்தம் 16 பேர் குணமடைந்ததால், அவர்கள் நேற்று சிறப்பு வாகனம் மூலம் வீடு திரும்பினர். முன்னதாக அவர்களுக்கு சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், சிறப்பு டாக்டர் சரவணன், தேசிய நல்வாழ்வு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்பரசு, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், பெரம்பலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் சுகாதாரத்துறையினர், மருத்துவக்குழுவினர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 26 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்கள் கடைகளை திறக்க அனுமதி கேட்டு மனு.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 14 கர்ப்பிணிகள் உள்பட 40 பேருக்கும் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பெரம்பலூர் வந்திருந்தவர்களில் 56 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: