பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு.

190

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு. மார்ச் மாதம் 24-ந் தேதி தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளும், கடந்த 7-ந் தேதி சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கால், டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. அதை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது.

புதிதாக யாருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 டாஸ்மாக் கடைகளில் 24 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க கூடினர். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி மது விற்கப்படும் என்றும், மது வாங்க வருபவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்ததால் காவல்துறையினர், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் டோக்கன் வழங்கினர்.

நேற்று நீல நிறத்திலான டோக்கன்கள் வழங்கப்பட்டது. காலை 10 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் வரிசையாக சென்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
Leave a Reply

%d bloggers like this: