பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

404

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் இதுவரை மொத்தம் 137 பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குன்னம் தாலுகா காடூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், கீழப்பெரம்பலூரை சேர்ந்த ஒருவருக்கும் என இரண்டு ஆண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கீழப்பெரம்பலூரை சேர்ந்த 53 வயதுடைய நபர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

இவ்விருவரும் வசித்த பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரப்பணிகளும், தூய்மை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ல் இருந்து 139 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும்  கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: