பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

419

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.


தமிழக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் புதியதாக பெண்ணகோணத்தில் 10 பேர், காடூரில் 5 பேர், வரிசைப்பட்டியில் 3 பேர் உள்பட 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

%d bloggers like this: