பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம்.

பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம்.

417

பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கம் | perambalur news

அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Government buses are available only within Perambalur district.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு தடை நீக்கப்பட்டு ஒரு சில பகுதிகள் தவிர்த்து 50 சதவீத பேருந்துகள் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்கியது. இந்நிலையில் தற்போது அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தமிழகத்தில் மண்டலத்திற்குள்ளான பொது போக்குவரத்தையும் ரத்து செய்து விட்டு, 26-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரை மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்கவும், மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டது. perambalur news

எளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைகள் மூடப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களிடம் இ-பாஸ் உள்ளதா? என்று காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதே போல மாவட்டத்திற்குள் மட்டும் நேற்று அரசு பேருந்துகள் இயங்கியது.  பெரம்பலூர் மாவட்ட எல்லைகள் வரை 20 புறநகர பேருந்துகளும் 15 நகர பேருந்துகள் என மொத்தம் 35 பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெரம்பலூரில் இருந்து செல்லும் பேருந்துகள் அல்லிநகர், அடைக்கம்பட்டி, உடும்பியம், பாடாலூர்  மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடி வரையிலும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

tag: perambalur, perambalur news,
Leave a Reply

%d bloggers like this: