பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

352

பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Corona awareness program at Mahatma Public School.

நாளுக்கு நாள் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று குறித்து இன்னும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இயங்கி வரும் மகாத்மா பப்ளிக் பள்ளியில் 16.06.2020 செவ்வாய் கிழமையன்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

[the_ad id=”7251″]

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மனநல மருத்துவர் மின்னத்துல் முபிதா MD அவர்கள், கொரோனா அறிகுறிகளைக் கண்டறிவது குறித்தும், அந்நோய் தொற்றிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது குறித்தும் விளக்கமளித்தார். மேலும் முகக்கவசத்தின் பயன்பாடு, கைகளை சுத்தமாக வைப்பது மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவது குறித்தும் விளக்கமளித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மகாத்மா பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளியின் மேலாண் தலைவர் திருமதி கவிதா துரையரசு அவர்கள், துணை மேலாண் தலைவர் திரு. ராஜ்குமார் மற்றும் செயலாளர் முகம்மது பாரூக் ஆகியோர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளியின் முதல்வர் திருமதி கயல்விழி சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மகேஸ்குமரன் திரு. நீலமேகம் தகவல் பதிவாளர் மற்றும் சமுக ஆர்வலர் திருமதி அகிலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

[the_ad id=”7250″]

tag: perambalur

gulf tamil news
%d bloggers like this: