பெரம்பலூர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீருடன் கொரோனோ விழிப்புணர்வு.

139

பெரம்பலூர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீருடன் கொரோனோ விழிப்புணர்வு.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கபசுர குடிநீர் வழங்குதல், கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது.

இம்முகாமில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ்.சுபாதேவி தலைமை தாங்கினார். இதில் அரசு சித்த மருத்துவர் காமராஜ், கொரோனா நோய் எதிர்ப்பு, நம் நாட்டு மருத்துவத்தின் பலன்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

முகாமில் மகிளா நீதபதி மலர்விழி, மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, குற்றவியல் நீதிபதி கிரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வினோதா, சார்பு நீதிபதி சகிலாபானு, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், கருப்புசாமி, செந்தில்ராஜா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் உள்பட நீதிமன்ற பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
Leave a Reply

%d bloggers like this: