பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ, பைக் மோதி வாலிபர் பலி.

பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ, பைக் மோதி வாலிபர் பலி

730

பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ, பைக் மோதி வாலிபர் பலி.

A youth was death when a load auto and a bike collided near Perambalur. Two people were injured.

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மகன் முத்துக்குமார் (22). வேலூரை சேர்ந்த செல்லமுத்து மகன் அஜித்குமார் (23). ஏசி மெக்கானிக்கான இருவரும் குன்னத்திலிருந்து பெரம்பலூருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சலையில் சித்தளி கிராமம் அருகே சென்ற பொது வேப்பூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

வீட்டில் இருந்துக்கொண்டே சுயதொழில் செய்யலாம்.

இதில் முத்துக்குமார், அஜித்குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் முருக்கன்குடியை சேர்ந்த மருதை மகன் சுரேஷ்குமார் (27) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த மருவத்தூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மருவத்தூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags: perambalur,
Leave a Reply

%d bloggers like this: