பெரம்பலூர் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க மேலும் ரூ. 4 லட்சம்.

170

பெரம்பலூர் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க மேலும் ரூ. 4 லட்சம்.

பெரம்பலூா் நகரில் உள்ள அம்மா உணவகங்களில், இலவசமாக உணவு வழங்குவதற்காக நேற்று (வியாழக்கிழமை) மேலும் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் கொடுத்தார்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக வருமானமின்றி இருக்கும் ஏழை, எளியோா், ஆதரவற்றோர்களுக்கு இலவசமாக உணவு வழங்க, மாவட்ட அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. அதனடிப்படையில், ஏற்கெனவே மூன்று கட்டமாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு.

பெரம்பலூர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீருடன் கொரோனோ விழிப்புணர்வு.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஏழை, எளிய, ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்குவதற்காக மேலும் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன், நகராட்சி ஆணையா் எஸ். குமரிமன்னனிடம் நேற்று (வியாழக்கிழமை) வழங்கினாா். நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, தொழில்நுட்பப் பிரிவு செயலா் ஜி. பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

அது போல் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ரூ. 500 ரொக்கம் வழங்கப்பட்டது. அதாவது, சென்னையில் ஆட்டோ ஓட்டிவந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 100 நபா்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ரூ. 500 ரொக்கம் ஆகியவற்றை மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியானது பெரம்பலூா் மாவட்டம், குன்னம் தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
Leave a Reply

%d bloggers like this: