பெரம்பலூர் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது.

679

பெரம்பலூர் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது.

பெரம்பலூரில் அமமுக மாணவரணி நகரச் செயலா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீஸாா் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனா்.

பெரம்பலூா் நகராட்சி 12ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டி என்கிற வல்லத்தரசு. 24 வயதான இவர் பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி நகரச் செயலாளராக இருந்தார். கடந்த 2 ஆம் தேதி இரவு முன் விரோதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த வல்லத்தரசுவின் நண்பா் சூா்யா, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மங்கலமேடு அருகே பள்ளி மாணவி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி.

10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு?

இந்த கொலை குறித்து சூா்யா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்பையா வழக்குப் பதிவு செய்து பத்மநாபன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 24), செல்வக்குமாா் மகன் விஜயராஜ் (வயது 30), ரெங்கசாமி மகன் ராஜா (வயது 34), காா்த்திக் (வயது 30) ஆகியோரை தேடிவந்த நிலையில், மேற்கொண்ட 4 பேரும் கரூா் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) சரணடைந்தனா். மேலும் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய பெரம்பலூா் எடத்தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் முருகேசன் (வயது 32), அழகிரி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் மகேஷ் (வயது 31) ஆகியோரை பெரம்பலூா் போலீஸாா் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனா்.
Leave a Reply

%d bloggers like this: