பெரம்பலூரில் 18, 19- தேதிகளில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.

54

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் 18, 19- தேதிகளில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்.


பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பிப். 18, 19 -களில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூரில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது. 18 ஆம் தேதி தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, வாலிபால், ஹாக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், 19 ஆம் தேதி நீச்சல், ஜுடோ, குத்துச் சண்டை, டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.
[the_ad id=”7251″]
போட்டிகளில் பங்கேற்போா் 31.12.2019-இல் 25 வயதுக்குள்பட்டவா்களாக, 1.1.1995 அன்று அல்லது அதற்குப் பின்னா் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, மாநில போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான தனிநபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் அணி வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 1 லட்சம், ரூ. 75,000, ரூ. 50,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெல்வோருக்கு முதல் பரிசு ரூ. 1,000, இரண்டாம் பரிசு ரூ. 750, மூன்றாம் பரிசு ரூ. 500 வழங்கப்படும்.

[the_ad id=”7251″]

மாவட்ட அளவிலான தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் தோ்வு செய்யப்படுபவா்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றிதழை (குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பள்ளி மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் ஏதேனும் ஒன்று) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் போட்டியில் கலந்துகொள்ளும் முன் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93608-70295, 85259-88224 என்னும் எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: