பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்பு

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்பு

55

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்பு

குற்றவியல் விதிகள் திருத்தத்தைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

குற்றவியல் நடைமுறை விதிகள் திருத்தம் செய்ததைக் கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கான சேம நல நிதி ரூ. 7 லட்சத்தை, ரூ. 15 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில், அச்சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இப் போராட்டத்தால், நீதிமன்றப் பணிகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: