பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி.

67

[the_ad id=”7250″]

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி.

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான ஆக்கி லீக் சாம்பியன்‌ஷிப் விளையாட்டு போட்டிகள் டாக்டர் எம்.ஜிஆர். விளையாட்டு வளாகத்தில் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள அணியினர் 7-ந் தேதி காலை 8.30 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[quote]பெரம்பலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்.[/quote]

6 மாவட்டங்களுக்கு…

ஆக்கி போட்டிகள் தொடர் போட்டி முறையில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப் படும். இதில் அதிக புள்ளிகள் எடுத்து வெற்றிபெறும் அணிகளுக்கு மண்டல அளவில் திருச்சியில் நடைபெறும் 6 மாவட்டங்களுக்கு இடையேயான (திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர்) போட்டியில் கலந்து கொள்ளலாம்.

[quote]செந்துறையில் வேளாண் அலுவலகத்தைப் பூட்டி பாமகவினா் போராட்டம்.[/quote]

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் வளைகோல் பந்து மன்றங்களில் உள்ள வளைகோல் பந்து அணியினர் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: